திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (08:56 IST)

திமுக தலைவர் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

திமுக தலைவராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த கருணாநிதி இம்மாதம் 7ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானதை அடுத்து திமுகவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி திமுக தொண்டர்களிடையே இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் வரும் 28-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது
 
இதன்படி திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் வரும் 26ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 27ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களுக்கு ஐந்து பேர் முன்மொழிய வேண்டும் என்றும், ஐந்து பேர் வழிமொழிய வேண்டும் இந்த இரண்டு பதவிகளுக்கும் வரும் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு கனிமொழியும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மு.க.அழகிரி தற்போது திமுகவில் இல்லாததால் அவர் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை