இடைத்தேர்தலில் அதிமுக தோற்கும்; திமுக ஜெயிக்குமா? தினகரன் கூறுவது என்ன?
தமிழகத்தில் இரண்டு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ், திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததாலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெள்ளும் என்ற ஃபார்முலாவை மற்றியது தினகரன். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது. அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்ள திமுக முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், தினகரன் இடைத்தேர்தல் குறித்து பேசியுள்ளார். எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும், துரோகிகள் ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்ததை போல திருப்பரங்குன்றம் தொகுதியிலும் இழப்பார்கள். இது ஜெயலலிதாவின் கோட்டை.
கருணாநிதி முதல்வராக இருந்ததற்கு எம்.ஜி.ஆர்தான் காரணம், அவரை நீக்கிய பிறகே அதிமுக தோன்றியது. தற்போது திமுகவில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிச்சனை அது பற்றி பேசுவது நாகரிகமாக இருக்காது என தெரிவித்துள்ளார்.