1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (22:46 IST)

திருப்பத்தை ஏற்படுத்துமா திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரலாறு காணாத வகையில் ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் இரண்டு பெரிய திராவிட கட்சிகள் தோல்வி அடைந்தன. இதில் திமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை
 
இந்த நிலையில் விரைவில் வரவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலை அனைத்து கட்சிகளும் ஒரு மானப்பிரச்சனையாக பார்க்கின்றன. கருணாநிதி வென்ற தொகுதி என்பதால் திருவாரூரில் திமுக வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றாலும் அந்த தொகுதியில் உள்ள முக்கிய சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக அதிமுக கருதுகிறது. அதேபோல் திருப்பரங்குன்றத்தில் திமுகவின் வாக்குகளை அழகிரி பிரிப்பார் என்பதால் அந்த தொகுதியிலும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என அதிமுக கருதுகிறது.
 
வரும் 28ஆம் தேதி திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தலைவராக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எனவே அவர் தனது தலைமை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்த இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளார்.
 
அதேபோல் டோக்கன் சிஸ்டம் மூலம் இந்த இரண்டு தொகுதிகளையும் எளிதில் வென்றுவிடலாம் என தினகரன் கட்சியினர்களும் கருதி வருகின்றனர். மொத்தத்தில் மக்கள் என்ன திருப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்