வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (17:12 IST)

கொரோனா தடுப்பூசிகளை போட்டால் அதை மட்டுமே செய்யக் கூடாது – குடிமகன்களுக்கு ஷாக்கிங் செய்தி!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகையே முடக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உலக நாடுகளின் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளனர்.  இதில் வெற்றிகரமாக சில கட்டங்களை தாண்டிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் சில நாடுகளில் தொடங்கியுள்ளது.  இந்த சோதனையின்போது தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக தாண்டப்பட்டால் அடுத்த கட்டமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவைச்  சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் தடுப்பூசி போட்டிக்கொள்பவர்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியை இரண்டு முறை 21 நாட்கள் இடைவெளியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.