செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (08:34 IST)

இந்தியா கூட்டணிக்கு இவ்வளவு தானா? அப்ப மீண்டும் மோடி உறுதியா? நியூஸ் எக்ஸ் - டி டைனாமிக்ஸ் கருத்துக்கணிப்பு..!

நாளை மறுநாள் முதல் பாராளுமன்ற தேர்தல் தொடங்க இருப்பதை அடுத்து இறுதி கட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நியூஸ் எக்ஸ் மற்றும் டி டைனமிக்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக தான் ஆட்சியில் வரும் என்றும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கருத்துக் கணிப்பின்படி பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 383 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு மட்டும் தனியாக 325 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

ஒரு சில கருத்துக்கணிப்பில் 200 முதல் 225 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளை தாண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் நியூஸ் எக்ஸ் மற்றும்  டி டைனமிக்ஸ் கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சி தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் பாஜகவை வீழ்த்தும் என்று நம்பப்படும் இந்தியா கூட்டணி வெறும் 109 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று அந்த  கருத்துக்கணிப்பில்   தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணி இந்த முறை ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் திமுக உட்பட அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் தான் உட்கார வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது

அதே நேரத்தில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகள் 50 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva