செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (20:19 IST)

விசாரணை அமைப்புகளை பாஜகவின் ஒரு அங்கமாக பிரதமர் மாற்றிவிட்டார்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

stalin
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த நிலையில்,  மதுரையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். 
இன்றைய பிரசாரத்தில் அவர் கூறியதாவது:
 
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
மேலும், தற்போதைய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். விசாரணை அமைப்புகளை பாஜகவின் ஒரு அங்கமாக பிரதமர் மாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 
திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன், ''தமிழ்நாடு முதலமைச்சரால் அலங்கரிக்கப்பட்ட வெற்றியின் அடையாளங்கள் இங்கே இருக்கிறது. 70 வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு மதுரைக்கு கம்பீரமாக வந்திருக்கிறார் முதலமைச்சர். ஆன்மீகமும், வரலாறும் எங்கள் இரு கண்கள். நவீனமும் வளர்ச்சியும் எங்கள் இரு கண்கள்... என்று நேசிக்கிற தமிழ் நாடு முதல்வரை மக்களின் சார்பில் மதுரையின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன் ''என்று பேசினார்.