1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , சனி, 13 ஏப்ரல் 2024 (09:12 IST)

பிரசாரத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி இனிப்பு வாங்கி ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட- ராகுல் காந்தி!

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை  ஆதரித்து கோவை  செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல் காந்தி விமானம் மூலம் கோவை வந்தார். 
 
அங்கிருந்து  பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் சிங்காநல்லூரிலுள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்தும் கலந்த இனிப்பு வகைகளை வாங்கினார்.  
 
பின்னர் ராகுல் காந்தி ஊழியர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.