1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (21:31 IST)

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK STALIN
தமிழ்நாட்டில் வரும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், திமுக கூட்டணியில் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
 
இன்று தேனி- திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்காது. ஒற்றை சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றிவிடுவார்கள் என்று விமர்சித்தார்.
 
மேலும், இத்தனை நாள் வெளி நாடுகளுக்கு டூர் என்ற பிரதமர். தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டில் டூர் சுற்றிவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.