1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (18:18 IST)

அல்லு அர்ஜூன், தேவி ஸ்ரீபிரசாத், ஸ்ரீகாந்த் தேவா மூவருக்கும் தேசிய விருது

Allu Arjun, Devi Sriprasad ,Srikanth Deva
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, யாருடைய படம் தேசிய விருது பெறப் போகிறது,  யார் யார் தேசிய விருது பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் இருந்தனர்.

இந்த நிலையில், தமிழில் 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளார் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

லெனின் இயக்கிய 'சிற்பிகளின் சிற்பங்கள்' ஆவணப் படத்திற்கு சிறந்த கல்வியியல் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தெலுங்கு சினிமாவில் புஷ்பா படத்தில் நடித்ததற்காக  நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது,