1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (12:45 IST)

விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படம்.. கேப்டன் அறிவிப்பு

shankumapandiyan
தமிழ் சினிமாவின் பிரபல   நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் நடிப்பில்  மதுரை வீரன் என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இவரது அடுத்த படம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டனர். இந்த நிலையில்,  வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பதாக தகவல் வெளியானது.

இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து, கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் நடிக்கின்றனர்.  இப்படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் தொடங்கிய நிலையில், நாளை விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகும் என்று விஜயகாந்த் தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’எனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர், நாளை (25/08/2023) வறுமை ஒழிப்பு தினமான எனது பிறந்த நாளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.