வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (14:08 IST)

இன்று மாலை தேசிய விருதுகள் அறிவிப்பு… தமிழில் எதிர்பார்க்கப்படும் படங்கள்!

2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

2021 ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்ட ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சூர்யாவின் ஜெய்பீம், தனுஷ் நடித்த கர்ணன், பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது போல சிறந்த நடிகருக்கான விருது பிரிவிலும், ஆர்யா, தனுஷ், சூர்யா ஆகியோருக்கு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.