வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (14:10 IST)

''விஜய் இந்த உயரத்தில் இருப்பதற்கு காரணம் இவர்தான்''- லோகேஷின் ஃபேவரெட் நடிகர் தகவல்

leo vijay
வாரிசு படத்திற்குப் பின் விஜய்  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்பட ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில்,  அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதால் தற்போது  லியோ போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவை பிரமாண்டமாக  நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே நடத்த படக்குழு திட்டமிட்டு இதற்காக ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் நடித்துள்ள மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  ''லியோ படத்தில் என் நடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்தது''என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ''நடிகர் விஜய்  இன்று இந்த உயரத்தில் இருப்பதற்கு காரணம் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான்.  ஆரம்பகாலத்தில், விஜய் சினிமாவில் முன்னுக்கு வர கடினமாக உழைத்து, அவருக்கு உதவியுள்ளார்.  நாளைய தீர்ப்பு படத்தில் இருந்து பார்க்கிறேன் விஜய் சிறிதும் மாறவில்லை'' என்று விஜய்யை பாராட்டியுள்ளார்.