வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (10:01 IST)

நேருவுக்கு அஞ்சலி செலுத்திய மோடி

சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமரும் தீவிர காந்திய பற்று கொண்டவருமான ஜவஹர்லால் நேரு மறைந்த தினம் இன்று. அதையொட்டி சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் முதலானோர் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் மோடி ட்விட்டர் மூலம் நேருவின் இரங்கலுக்கான அஞ்சலியை செலுத்தியுள்ளார். அதில் அவர் “ஜவஹர்லால் நேரு மறைந்த தினமான இன்று அவரது இரங்கலை நினைவுகூர்வோம். அவர் இந்த நாட்டுக்கு செய்த அளப்பரிய நன்கொடைகளை நினைத்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.