வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (08:07 IST)

தாமதமாக வந்த சோதனை முடிவுகள்: தனியார் ஆய்வகத்துக்கு தடை!

மும்பையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தாமதமாக அளித்து வந்த தனியார் ஆய்வகத்திற்கு அம்மாநாகராட்சி தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மூன்று லட்சத்தை நெருங்கி வருகின்றன. மகாராஷ்டிராவில் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மகராஷ்டிராவின் முக்கிட வணிக பகுதியான மும்பை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகமும். அதற்கடுத்து டெல்லியும் அதிக பாதிப்புகளை அடைந்துள்ளன.

இந்நிலையில் மும்பையில் கொரோனா பரிசோதனைகளை செய்து முடிவை அளித்து வரும் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் ஒன்று முடிவுகளை மிகவும் தாமதமாக வெளியிட்டு வந்துள்ளது. இதுகுறித்த் விசாரணையில் ஆய்வுகள் தாமதமானதை அந்த நிறுவனமும் ஒத்துக்கொண்டுள்ளது.

ஆய்வு முடிவுகள் தாமதமாவதால் உடனடி சிகிச்சைகள் அளிக்க முடியாமல் போவதால் அது நோய் பரவலுக்கும், உயிரிழப்பிற்கும் வழி வகுப்பதாக பிஎம்சி கூறியுள்ளது. இதனால் அந்த ஆய்வகம் செயல்பட 4 வார தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.