1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (07:47 IST)

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து – 3 மாதங்களுக்குப் பிறகு முதல் கிரிக்கெட் தொடர்!

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் கிட்டதட்ட மூன்று மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடக்காத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று விளையாட இருக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வாரியங்கள், ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் 8 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இதற்காக ஒரு மாதத்துக்கு முன்னராகவே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்று விட்டனர். அங்கு அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சில நாட்களுக்குப் பின்னர்தான் அவர்கள் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி தொடரில் பந்தில் எச்சில் தடவக்கூடாது மற்றும் வீரர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும் உள்ளிட்ட பல புதிய விதிமுறைகளை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.