புதிய கொரோனா தொற்றால் இந்தியாவுக்கு ஆபத்து: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடங்களாக மனித இனத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது என்பதை பார்த்து வருகிறோம். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமல் செய்யப்பட்ட ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அவதியில் இருந்தனர் என்பதும் லட்சக்கணக்கான மக்கள் பசியும் பட்டினியும் மடிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் குறைந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது
புதிய கொரோனா வைரஸால் ஆபத்து ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உருமாறிய கொரோனாவை இந்தியாவில் தடுக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் இந்த கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இந்த எச்சரிக்கையை கணக்கில் கொண்டு மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து புதிய வகை கொரோனா தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்