1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (08:24 IST)

இந்தியாவில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று !

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 20 ஆக உயர்ந்துள்ளது.

 
பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
 
நேற்று 6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
 
இந்நிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 20 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.