செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:16 IST)

ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு எனத் தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கபட்டு கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஜனவரியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த    நிலையில்,  அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள  ராமர் கோயில் குடமுழுக்கிற்காக, சமீபத்தில்  இலங்கை நாட்டிலிருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்ட ராமர் பாதம் மீனாட்சி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில், அயோத்தியில் வரும்  ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.
 
இதுகுறித்து, மார்க்ஸ்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,

‘’பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் –ம்  ஒரு மதவிழாவை, பிரதமர், உ.பி., முதல்வர் மற்றும் பிற  அரசுப் பணியாளர்கள் நேரடியாகப் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியாக மாற்றியிருப்பது வருந்தத்தக்கது.

மதம் என்பது அரசியல் ஆதாயத்திற்கான ஒரு  கருவியாக மாற்றப்படக்கூடாது என்பது தனிப்பட்ட விருப்பம் என்று அது நம்புகிறது. எனவே ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளது.