ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (15:32 IST)

அந்தக் கட்சியுடன் கூட்டணி..? இறைவன் அருளால் அது நடக்கும்-சரத்குமார்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

இதையொட்டி பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், தமிழ்நாட்டில் அக்கட்சியுடன் எந்தக் கட்சிகள் இணையவுள்ளன என்ற கேள்வி எழுந்தன.

இந்த  நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் இணையுமா என அரசியலர் விமர்சகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில்,  நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் பாஜகபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

‘’பிரதமர் மோடி ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்று மட்டும்  நினைக்காமல் அவர் நாட்டை எப்படி பெருமைப்படுத்தினார்,என்று பார்க்க வேண்டும். பாஜக உடன்  இணைந்து பயணிக்க  வாய்ப்பு இருந்தால் இறைவன் அருளால் அது நடக்கும் ‘’என்று தெரிவித்துள்ளார்.