செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:05 IST)

ஒரு கிளாஸ் பாலால் பறிபோன இரண்டு உயிர்கள்! ஊரடங்கில் நடக்கும் விபரீத சம்பவங்கள்!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் தந்தையே மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல வித்தியாசமான மற்றும் விபரீதமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒரு கிளாஸ் பாலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புராண்பூர் பகுதியில் உள்ள சோஹன்னா கிராமத்தில் குர்முக் சிங் என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக இப்போது அனைவரும் வீட்டில் இருக்க குர்முக் தனது மகனிடம் ஒரு கிளாஸ் பால் எடுத்து வர சொல்லியுள்ளார். ஆனால்வ் 16 வயதான அவரது மகனோ அவருக்கு அரைகிளாஸ் பாலை கொடுத்து விட்டு தனக்கு முழு கிளாஸ் பாலை எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குர்முக் துப்பாக்கியை ஆத்திரத்தில் மகனை சுட்டுக்கொன்றார். அதனை தடுக்க வந்த அவரின் சகோதரரையும் சுட்டார். பிறகு பதற்றத்தில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் குர்முக் மற்றும் அவரது மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறனதுவிட குர்முக்கின் சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.