1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (16:40 IST)

அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி திடீர் ஆலோசனை: ஊரடங்கு நீட்டிப்பா?

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்குள் பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்க வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன 
 
குறிப்பாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய  மாநிலங்களில் மத்திய அரசிடம் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன
 
இந்த நிலையில் இன்று அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி அவர்கள் பெரும்பாலான மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார் 
 
இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டவுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவே மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது