செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2020 (15:48 IST)

15 மாவட்டங்களை இன்று நள்ளிரவு முதல் முழுமையாக சீல் - உத்தரப்பிரதேச மாநில அரசு

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களை இன்று நள்ளிரவு முதல் முழுமையாக சீல் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

மேலும், மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று, செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊடகவியலாளர் உட்பட போபாலில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, போபாலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.