1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi has plans to extend lockdown in India

ஊரடங்கை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை: மோடி...?

#COVID19
நாட்டில் ஊரடங்கை உடனடியாக திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை என மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 14.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3.08 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் 5,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க மாநில அரசுகளும் கோரிக்கை வைத்துள்ளன. இதனை பிரதமர் மோடியே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகளுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி நாட்டில் ஊரடங்கை உடனடியாக திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை என திட்டவட்டமாக கூறியதாக என தகவல் வெளியாகியுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கொரோனா : அமெரிக்காவில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் பேர் பாதிப்பு ...21,711 பேர் மீட்பு !