செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2020 (16:06 IST)

ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை - பிரதமர் மோடி

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் மக்களிடன் பணப்புழக்கம் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரமும் பெருமளவு சரிவடைந்துள்ளது. இருந்தபோதிலும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிவாரண உதவி செய்துவருகிறது.

இந்நிலையில் மாநில அரசுகள் எப்போது ஊரடங்கை தளர்த்தும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :

மாநில அரசுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்களிடம் மோடி காணொலியில் ஆலோசனை நடத்தினார். அதில், மாநில அரசுகள்  ஊரடங்கை நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் சில கடினமான முடிவு எடுக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.