1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:53 IST)

குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றியபோது திடீரென உயிரிழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

India flag
குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நேற்று 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டது. அப்போது பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்கே என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் தேசியக்கொடி ஏற்ற முயன்றார். அப்போது திடீரென உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அந்த நபரை காப்பாற்ற முயன்ற நான்கு பேர்களும் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
உயிரிழந்த நபரின் பெயர் அபிஷேக் என்றும் தனியார் பயிற்சி மையம் நடத்தி வரும் அவர் ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும். தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. 
 
அந்த வகையில் நேற்று அவர் தேசியக்கொடி ஏற்ற போது இரும்பு கொடி கம்பத்தில் 11 ஆயிரம் வோல்ட்மின்சாரம் பாய்ந்ததால் அவர் மரணம் அடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
 
Edited by Siva