மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி கொண்டிருக்கின்றன. முதல் கட்ட முடிவுகளில் இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், தற்போது 158 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் பாஜக கூட்டணி 93 இடங்களிலும், இந்தியா கூட்டணி 56 இடங்களிலும், மற்றவர்கள் 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், தற்போது 51 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் பாஜக கூட்டணி 34 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 16 தொகுதிகளிலும், மற்றவர்கள் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளனர். இங்கு ஆட்சி அமைக்க 41 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 23,464 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Edited by Mahendran