புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:45 IST)

மகாராஷ்டிரா டூ தெலுங்கானா.. துணை தேடி 300 கி.மீ அலையும் ஜானி புலி!

Johny Tiger

குளிர்காலத்தில் பெண் புலியை தேடி ஜானி என்ற ஆண் புலி மாநிலம் விட்டு மாநிலம் பயணித்து வருகிறது.

 

 

மகாராஷ்டிராவின் கின்வாட் வனப்பகுதியில் உள்ள 7 வயது ஆண் புலியான ஜானி அப்பகுதியில் பிரபலமானது. பொதுவாக புலிகள் குளிர்காலத்தில் இனப்பெருக்கத்திற்காக இணையை தேடி செல்வது வழக்கம். இவ்வாறு துணை தேடும் ஆண் புலிகளை ஈர்க்க பெண் புலிகள் சிறப்பு வாசனையை வெளியிடும்.

 

அவ்வாறாக ஜானி தனது இணையை தேடி கடந்த 30 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டது. தற்போது சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ள ஜானி புலி, தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. ஆனாலும் இதுவரை ஜானி புலிக்கு ஜோடி கிடைக்கவில்லை. அதனால் தனியாக தொடர்ந்து அது பயணித்து வருகிறது.

 

மேலும் செல்லும் வழியில் 4 மாடுகளை அடித்துக் கொன்றுள்ளது ஜானி புலி. மேலும் பல சாலை வழித்தடங்களில் ஜானி புலியை சிலர் பார்த்ததாக புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.

 

Edit by Prasanth.K