1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 29 ஜூன் 2025 (12:24 IST)

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க இடையூறு! கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற மனைவி!

crime

கர்நாடகாவில் கள்ளக்காதலனோடு உல்லாசம் அனுபவிக்க தடையாக இருந்த கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி (50), இவரது மனைவி சுமங்கலா (43). சுமங்கலா கல்லூரி பெண்கள் விடுதி ஒன்றில் சமையல்க்காரராக பணியாற்றி வருகிறார். அப்போது அவருக்கும் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்த நாகராஜூ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

 

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில் இந்த விஷயம் சங்கரமூர்த்திக்கு தெரிய வந்து அவர் சுமங்கலாவை கண்டித்துள்ளார். கணவன் இருந்தால் நாகராஜூடன் உல்லாசமாக இருக்க முடியாது என்பதால் அவரை கொலை செய்ய கள்ளக்காதலன் நாகராஜூடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார் சுமங்கலா.

 

அதன்படி, கடந்த 24ம் தேதி கடுஷெட்டிஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரமூர்த்தியை சுமங்கலாவும், நாகராஜூம் கண்ணில் மிளகாய் பொடியை தூவியும், கட்டையால் தாக்கியும், கழுத்தில் காலை வைத்து மிதித்தும் கொடூரமாக கொன்றுள்ளனர்.

 

பின்னர் உடலை சாக்கில் கட்சி பக்கத்து கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் வீசிவிட்டு, ஒன்று தெரியாதது போல காவல் நிலையத்தில் சென்று கணவனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் சுமங்கலா. ஆனால் விசாரணையில் போலீஸாருக்கு சுமங்கலா மீதே சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கடைசியாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் சுமங்கலா. அதை தொடர்ந்து சுமங்கலாவையும், கள்ளக்காதலன் நாகராஜூவையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K