திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 20 நவம்பர் 2024 (08:10 IST)

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று தேர்தல்.. வாக்குப்பதிவு தொடங்கியது..!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியான நிலையில், நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதும், இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், கடந்த 13 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் வாக்களித்து வருவதாகவும், இதுவரை எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



Edited by Siva