வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (08:42 IST)

பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க சென்ற நடிகர்! பிக்பாக்கெட் அடித்த ஆசாமி!

Mithun

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு சென்ற பாலிவுட் நடிகரிடம் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஜார்கண்டில் இன்று (நவம்பர் 13) மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஜார்கண்டில் உள்ள தான்பத் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். ஆனால் அங்கு சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பலர் மேடையிலேயே ஏறி வந்து மிதுனுடன் செல்பி எடுத்துள்ளனர்.
 

 

அப்போது அவர் பையில் இருந்த பர்ஸை கூட்டத்தில் இருந்த ஆசாமி ஒருவர் பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘மிதுனின் பர்ஸை திரும்ப கொடுத்து விடுங்கள்’ என மேடையிலிருந்து மைக்கிலேயே அறிவித்துள்ளார்கள். ஆனாலும் மிதுனின் பர்ஸ் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் பிரச்சாரத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி சென்றுள்ளார் மிதுன் சக்ரவர்த்தி.

 

Edit by Prasanth.K