வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 மே 2021 (00:21 IST)

திருமணத்தில் ஆணும் பெணும் மாறி மாறி தாலி கட்டிய வினோதம்

மும்பையில் வசித்துவரும் தனுஜா மற்றும் ஷார்துல் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியதால் கடந்த ஆண்டு திருமண நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரொனாவால் தள்ளிப்போனது.

இந்நிலையில் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அப்போது, ஷார்துலுக்கு ஒரு யோசனை வந்துள்ளது, ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு மட்டுமே சடங்குகள் நடைபெறுவதாவும் இதை நாம் பிந்தொடர வேண்டாம் எனக் கூறி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாலி கட்டிக்கொண்டனர்.

புதிய முறையில் மனைவி கணவனுக்கும் கணவன் மனைவிக்கும் தாலி கட்டிக் கொண்ட சம்பவம் இவர்களின் உறவினர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது