ஜெயலலிதா நினைவிடத்தில்...இபிஎஸ் – ஒபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்!!!
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து, அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாக்கள் தனியாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனையில் முன்னாள் சிஎம். இபிஎஸ், ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனிசாமி , பா. வளர்மதி, நந்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரைத்தேர்வு செய்யாமலேயே கூட்டம் காலை 10 ஆம் தேதி 9 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் – ஒபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் எழுந்ததாகவும், இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறிக் குற்றச்சாட்டு முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் உட்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது