ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (10:02 IST)

அமெரிக்கா அழைத்த நாசா: போக மறுத்த இந்திய மாணவர்

Gopal Jee
இந்திய மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்புகளை கண்டு வியந்து அமெரிக்காவுக்கு நாசா அழைத்தும் செல்ல மாணவன் மறுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி. இவரது தந்தை ஒரு விவசாயி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சாதிக்கும் எண்ணம் கொண்ட கோபால்ஜி பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்துள்ளார்.

2017ம் ஆண்டில் பிரதமர் மோடியை சந்தித்த கோபால்ஜி தனது முயற்சிகள் பற்றி அவரிடம் எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து அறிவியல் தொழில்நுட்பத்துறை, அகமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை முதலியவற்றில் தனது பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து காட்டியுள்ளார்.

இவரது கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்த அமெரிக்காவின் நாசா போன்ற அமைப்புகள் இவருக்கு தங்கள் நாட்டில் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் அந்த அழைப்பை மறுத்துள்ள கோபால்ஜி இந்தியாவுக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்க விரும்புவதாக கூறியுள்ளார்.