செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:44 IST)

வருமானவரி தாக்கல்; இன்றே கடைசி நாள்! – வருமானவரித்துறை எச்சரிக்கை!

income tax
வருமானவரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துபவர்கள் இன்றைக்குள் வருமானவரி தாக்கல் செய்ய வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

2022 – 2023ம் நிதியாண்டிற்கு வருமானவரி செலுத்துவதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதுமுதலாக வரி செலுத்துபவர்களை வருமானவரி தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறை அறிவுறுத்தி வருகிறது.

ஆண்டுக்கு ரூ.2.5 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் வருமானவரி தாக்கலை அபராதமின்றி செய்ய இன்றே (ஜூலை 31ம் தேதி) கடைசி தேதியாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கு பின் வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்குள் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம் அபராதமும், ஜனவரியிலிருந்து மார்ச் மாதத்திற்குள் செலுத்தினால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும்.

2023மார்ச் மாதத்திற்கு பிறகு வருமானவரி தாக்கல் செய்ய முடியாது. எனவே வருமானவரியை இன்றே தாக்கல் செய்து அபராதம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜுலை 27 வரை மொத்தமே 40 சதவீதமே வருமானவரி தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 நாட்களில் பல லட்சம் பேர் வருமானவரி தாக்கல் செய்துள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.