திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2022 (10:32 IST)

அதிக வருமானவரி செலுத்திய நபர்: ரஜினிக்கு விருது

Rajinikanth
அதிக வரி செலுத்திய விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
வருமானவரி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று வருமானவரி தினம் கொண்டாடப்படுகிறது
 
இதனை அடுத்து தமிழ்நாட்டில் அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருது புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வழங்கினார் என்பதும் இந்த விருதை ரஜினிக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது 
 
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளதை அடுத்து இந்த தகவலை அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்