வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (11:35 IST)

20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!

income tax raid
20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!
தமிழகத்தில் இன்று திடீரென 20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாகவே வருமானவரித் துறையினர் அவ்வப்போது தமிழகத்தில் உள்ள பிரபலங்களின் வீடுகளில் குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருவதாகவும் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது