திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (19:19 IST)

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்; மீறினால் ரூ.5000 அபராதம்!

income tax
வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடைசி தேதி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
ஆனால் கடைசி தேதி நீட்டிக்கபடாது என்றும், ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி தேதி என்றும் அதற்குள் வருமான வரித்துறை தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.5000  அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான வரித்துறை கடைசி தேதி நீடிப்பு பெற்று வந்த நிலையில் தற்போது கடைசி தேதி நீடிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் உடனடியாக வருமான வரி தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
5 லட்சம் வரை உள்ள குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.1000 அபராதம் என்றும்,  5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 5,000 ரூபாய் அவதாரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது