வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூலை 2021 (17:18 IST)

சேமிப்பு கணக்குகளுக்கு இனி மாதந்தோறும் வட்டி: ஐடிஎஃப்சி வங்கி அறிவிப்பு

சேமிப்பு கணக்குகளுக்கு அனைத்து வங்கிகளும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கி வரும் நிலையில் ஐடிஎஃப்சி வாங்கி மட்டும் மாதந்தோறும் வட்டி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஏற்கனவே ரிசர்வ் வங்கி மாதம் ஒரு முறை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி வழங்கலாம் என்று அனுமதி அளித்தது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஐடிஎப்சி வாங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களில் சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பு தொகை மாதந்தோறும் வட்டி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் வட்டி கணக்கிடப்பட்டு அந்த கூட்டுத் தொகையை ஒரு மாதம் கழித்து மொத்தமாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து ஐடிஎப்சி வங்கி போலவே மற்ற வங்கிகளும் மாதந்தோறும் சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன