1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:16 IST)

கடும் எதிர்ப்பு எதிரொலி: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிகுறைப்பு வாபஸ்!

கடும் எதிர்ப்பு எதிரொலி: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிகுறைப்பு வாபஸ்!
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
பொதுமக்கள் தங்கள் சேமிக்கும் பணத்தை சிறு சிறு சேமிப்புத் திட்டங்களில் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே இந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பணக்காரர்கள் தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரும் நிலையில் ஏழை எளியவர்களுக்கு சிறுசேமிப்பு மட்டுமே உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் வட்டி குறைக்கப்பட்டதால், அதில் முதலீடு செய்த பலர் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு ஏற்படும் என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து வருகிறது.