1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (12:25 IST)

வட்டியை எல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது… உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

கொரோனா காலத்தின் சலுகையாக கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து கடன்களுக்கான மாத தவணை தொகையை 6 மாதங்களுக்கு தரவேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவ்வாறு வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என அறிவித்துள்ளது.