ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (17:25 IST)

வீட்டுக்கடன் வட்டியை உயர்த்திய ஸ்டேட் பாங்க்

ஸ்டேட் பாங்க் வங்கி வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
ஸ்டேட் பாங்க் வங்கி வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் வங்கி அரிவித்துள்ளதாவது:

கடந்த மாதம் வரை வீட்டுக் கடனுக்கான இருந்த குறைந்த வட்ச வட்டி விகிதம் 6.80% இருந்த நிலையில், கடந்த மாதம்  1 ஆம் தேதி 6.70 %  குறைத்து சலுகை யாக அறிவித்தது. கடந்த 1 ஆம் தேதியிலிந்து ஸ்டேட் பாங்க் வங்கியில் வீட்டுக்க கடனுக்கான  வட்டி விகிதம் 6.70 ல் இருந்து 6.95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோல் வீட்டுக்கடனுக்கான பிராசசிங் கட்டணம் குறைந்தது ரூ.10000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் வீட்டுக்கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால்,  மற்ற வங்கிகளும் இந்த வட்டியை உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.