திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (15:51 IST)

பாஜகவுக்கு ஓட்டு போட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு ஓட்டு போட்ட மனைவியை ஒருவர் விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 26 வயது பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கும் தனது கணவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாகவும் திருமணத்திற்கு பின் தான் மாமியாரால் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள் என்றும், அதன் பிறகு கணவருடன் சேர்ந்து வாழ்ந்தேன் என்று கூறிய அவர் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நான் ஓட்டளித்தேன் என்று கூறியதால் என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது ஆத்திரமடைந்தனர் என்றும் இதையே சொல்லி எனக்கு கணவர் என்னை முத்தலாக் சொல்லி விவாகரத்து சேலத்து விட்டார் என்றும் கணவர் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவருடைய கணவர், மாமியார் உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran