1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2024 (17:07 IST)

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

Priyanka Gandhi
பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர, நீட் நுழைவுத் தேர்வு,  வினாத்தாள் கசிவு, நீட் முதுகலை தேர்வு - ரத்து, யு.ஜி.சி. நெட் தேர்வு ரத்து, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ரத்து, இன்று நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்
 
பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களிடம் ஒப்படைக்கும் அரசியல் பிடிவாதம் மற்றும் ஆணவத்தின் காரணமாக, வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, கல்லூரிகளில் துறைகள் காணாமல் போவது ஆகியவை நமது கல்விமுறையின் அடையாளமாக மாறியுள்ளன என்று அவர் விமர்சித்துள்ளார்.

பாஜக அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் இன்று இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பாஜக அரசு மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் திறமையான இளைஞர்கள் பாஜகவின்  ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பொன்னான நேரத்தையும், தங்கள் முழு ஆற்றலையும் வீணடிக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.  பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.