1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2024 (12:52 IST)

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம்..! அதிரடி காட்டிய அண்ணாமலை..!!

Annamalai
மயிலாடுதுறை, திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜகவின் தோல்வியை தொடர்ந்து கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் மீதும் அதிரடி நடவடிக்கை பாய்ந்து வருகிறது.  சமீபத்தில் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாண ராமன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


இந்நிலையில் தற்போது மீண்டும் களையெடுக்கும் நடவடிக்கையில் தமிழக பாஜக இறங்கி உள்ளது. திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் எஸ்.பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவரான கே.அகோரம், திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.