வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 4 மே 2022 (09:43 IST)

பள்ளிவாசலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய இந்து குடும்பம்!

mosque
பள்ளிவாசலுக்கு ஆக இந்து குடும்பம் தங்களது நிலத்தை வழங்கியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள 2.1 ஏக்கர் நிலத்தை பள்ளிவாசலுக்காக இந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்
 
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த தன்னுடைய தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த நிலத்தை பள்ளிவாசலுக்கு கொடுத்துள்ளதாக குடும்பத்தினர் பெருமையுடன் கூறியுள்ளனர் 
 
இந்த நிகழ்வு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு மிகப்பெரிய சான்றாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்