1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:32 IST)

இந்துத்துவாவின் கைக்கூலியாக பாஜக..! – பாஜக பிரமுகர் விமர்சனம்!

MLC Viswanath
இந்துத்துவா அமைப்புகளின் கைக்கூலியாக பாஜக செயல்படுவதாக பாஜக பிரமுகரே விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பாஜக கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில், மத்தியிலும் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்து வந்தாலும், பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கர்நாடக பாஜக பிரமுகரான எம்.எல்.சி விஸ்வநாத் பேசியபோது “இந்துத்துவா அமைப்பின் கைக்கூலியாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அது வெட்கக்கேடானது. அதனை நிறுத்தாவிடில் இந்திராகாந்தி போல தோற்க நேரிடும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பாஜக அரசு, அதனை இந்துத்துவா அமைப்புகளிடம் கொடுப்பதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.