புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (12:17 IST)

மனதில் மதவெறியுடன் வளரும் தலைமுறைகள்: கேரள ஐகோர்ட் கண்டனம்!

மனதில் மதவெறியுடன் வளரும் தலைமுறைகள்: கேரள ஐகோர்ட் கண்டனம்!
இன்றைய தலைமுறைகள் மனதில் மத வெறியுடன் வளர்வதாக கேரள ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
கேரளாவில் உள்ள ஆழப்புழா என்ற பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் பேரணி நடந்தது. இந்த பேரணியில் இந்து மற்றும் கிருத்துவ மதங்களுக்கு எதிராக சிறுவன் ஒருவன் கோஷம் எழுப்பிய வீடியோ இணையதளங்களில் வைரலானது 
இந்த வீடியோவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள கேரள உயர்நீதிமன்றம் மனதில் மதவெறி உடன் வரும் தலைமுறையை வளர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பேரணியில் சிறுவனை அழைத்து வந்த நபரை காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவிட்டதை அடுத்து இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
சர்ச்சைக்குரிய வார்த்தைகள் எழுப்பப்பட்டதும் உடனே அதை தடுத்து நிறுத்தி விட்டோம் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது