1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:39 IST)

சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

udhayanidhi
சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது
 
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார் 
 
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வழக்குகள் பற்றி வேட்புமனுவில் தவறான தகவல் தந்ததாக அந்த தொகுதியின் வாக்காளர் பிரேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. உதயநிதியின் விளக்க மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் வாக்காளர் பிரேமலதாவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது