திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (12:33 IST)

ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்  மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அபகரிப்பு வழக்கு உள்பட 3 வழக்குகளில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் மட்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் சம்பந்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
இந்த வழக்கில் தற்போது ஜெயக்குமாரின் மகன் ஜெயப்பிரியா மற்றும் மகன் நவீன் குமார் சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் கொடுத்தது ஆனால் அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது