புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (17:23 IST)

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம் –அதிர்ச்சி தகவல் !!!

2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அன்று நாட்டில் இருக்கும் கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கும் விதமாக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது எனப் பிரதமர் அறிவித்தார். அதன் பின்னர் புது 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்ப்ட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஆனாலும் நாட்டில் புழக்கத்தில் இருந்த 99 சதவீத கருப்புப் பணம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை ஒரு தோல்வியாகவே பொருளாதார வல்லுனர்களால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதற்குக் காரணமாக 2,000 ரூபாய் தாள்கள் வரி ஏய்ப்பு, பண மோசடி போன்ற விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதால் 2,000 ரூபாய் தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.